உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலத்தில் கழிவு அகற்றம்

பாலத்தில் கழிவு அகற்றம்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே சக்குடி பாலத்தில் சிதறிய கிரானைட் கழிவு தினமலர்செய்தியை அடுத்து ஊழியர்கள் அகற்றினர். இரு நாட்களுக்கு முன் கிரானைட் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சக்குடி பாலத்தில் செல்லும் போது தடுமாறியதால் கழிவு பாலத்திலேயே சிதறியது. கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். கழிவு சிதறி பாலம் முழுவதும் வெண்மை நிறத்திற்கு மாறியது. மேலும் கிரானைட் துாசியால் பாலத்தில் யாரும் நடந்து செல்லவே முடியவில்லை. ஆடி காற்று காரணமாக துாசி கிளம்பியதால் டூவீலரில் செல்பவர்கள் பலரும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கழிவுகளை அகற்றி பாலத்தை சுத்தப்படுத்தினர்.இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ