உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

கட்டிக்குளத்தில் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

மானாமதுரை:மானாமதுரை அருகே கட்டிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் காற்றடித்தாலும், மழை பெய்தாலும் நாள் கணக்கில் மின்துண்டிப்பு செய்யப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மானாமதுரை அருகே கட்டிக்குளம் மற்றும் 15 கிராமங்களுக்கு ராஜகம்பீரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றடித்தாலும், சிறு மழை பெய்தாலும் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இது குறித்து கிராம மக்கள் மின் அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி, தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை