உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..

கரையில்லா கால்வாயில் வீணாகும் கண்மாய் தண்ணீர்..

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசன கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததால் கரை உடைந்து தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிக்கப்படுகிறது.அ.காளாப்பூரில் உள்ள பாலாறு தடுப்பணையில் இருந்து அருவிக் கால்வாய் வழியாக அருவிக் கண்மாய், கொல்லன்கண்மாய், சுனைக் கண்மாய்,மொச்சிக் கண்மாய் மற்றும் தேனவல்லிக் கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இக்கால்வாய் தேனவல்லிக் கண்மாய் அருகே மூன்று பிரிவு கால்வாயாக பிரிந்து சுனைக் கண்மாய்க்கு ஒரு பிரிவும் மொச்சிக் கண்மாய், புரசன் கண்மாய், மாத்தின்னிக் கண்மாய் போன்றவைகளுக்கு ஒரு பிரிவும், தேனவல்லிக் கண்மாய்க்கு ஒரு பிரிவுமாக தண்ணீர் செல்கிறது.இதில் தேனவல்லிக் கண்மாய் கால்வாய் ஆழம் இல்லாமல் மேடாக உள்ளதால் கால்வாய் கரையும் அகலம் இல்லாமல் உள்ளது. இதனால் இக்கால்வாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தேனவல்லிக் கண்மாய்க்கு போதிய தண்ணீர் தேக்க இயலாத நிலையில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இக்கரையில் விவசாயிகள் நடந்துசெல்ல இயலாமல் விழுந்து காயம் அடையும் நிலையில் உள்ளது. எனவே தேனவல்லிக் கண்மாய் கரையை 50 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு அமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை