உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என்ன போலீஸ் அலட்சியம் காரணமா

திருப்புவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு என்ன போலீஸ் அலட்சியம் காரணமா

திருப்புவனம்: திருப்புவனத்தில் கடந்த ஒரு மாதமாக போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லுாரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.திருப்புவனம் நகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என ஏராளமானவை உள்ளன. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள ஏனாதி, பழையனுார், அல்லிநகரம், லாடனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் தினசரி பலரும் திருப்புவனம் வந்து செல்கின்றனர்.திருப்புவனம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புற மாணவ, மாணவியர்களே அதிகளவில் வந்து செல்கின்றனர். தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் திருப்புவனத்தில் முறையான போக்குவரத்து வசதி இல்லை. குறுகிய சாலையில் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. ரோட்டை ஒட்டி 200க்கும் மேற்பட்ட டூவீலர்கள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதால் சாலை மேலும் குறுகிவிட்டது.உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவில் குழாய் பதிப்பதற்காகவும், சாக்கடை கால்வாய் கட்டுவதற்காகவும் பாதை மூடப்பட்டு விட்டது. திருப்புவனத்தில் இருந்து பழையூர் வழியாக அல்லிநகரம், கலியாந்துார், நரிக்குடி, புல்வாய்க்கரை, திருச்சுழி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. டூவீலர், கார் உள்ளிட்டவை உச்சி மாகாளியம்மன் தெரு வழியாக சென்று வந்தன. அந்த பாதை மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் மணி மந்திர விநாயகர் கோயில் வழியாக செல்கின்றன. ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் நிலவி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்து போலீசார் மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.மாவட்ட காவல் துறை நிர்வாகம் திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன என கண்டறிந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை