உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடியும் ஊருணி சுவர் சீரமைக்கப்படுமா

இடியும் ஊருணி சுவர் சீரமைக்கப்படுமா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே இடிந்து விழுந்த ஊருணி சுற்றுச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வொன்றியத்தில் கிருங்காக்கோட்டை கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள ஊருணியின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு குண்டுகற்களால் கட்டப்பட்டது.மழைக்காலங்களில் பாலாற்று தண்ணீர் மூலம் இந்த ஊருணி நிரம்பி ஒட்டுமொத்த கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி வருகிறது. இந்நிலையில் ஊருணி சுற்றுச்சுவர் சில இடங்களில் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு மற்ற பகுதிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சுவர் இடிந்த பகுதிகளை விரைவில் சீரமைத்து ஒட்டுமொத்த ஊருணியையும் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ