உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாடும் குறுங்காடுகள் திட்ட மரக்கன்றுகள்

வாடும் குறுங்காடுகள் திட்ட மரக்கன்றுகள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் வேலை உறுதித் திட்டம் நிறுத்தப்பட்டதால் குறுங்காடுகள் திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் வாடி வருகின்றன. தமிழகத்தில் காடுகளின்பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் 260 கோடி உள்நாட்டு மரக்கன்று நட திட்டமிடப்பட்டது. இதற்காக 2022ல் குறுங்காடுகள் திட்டம் துவக்கப்பட்டது. தற்போதுள்ள 30 ஆயிரத்து 194 சதுர கி.மீ., பரப்பை 42 ஆயிரத்து919 சதுர கி.மீ., ஆக மாற்ற அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி பள்ளிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குறுங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை உறுதித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியாமல் அவை வாடி வருகின்றன. எனவே வேலை உறுதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் வரை காத்திருக்காமல் உடனே மாற்று வழிகளில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ