உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் அயினிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் 63, பெயின்டராக வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் மதகுபட்டியில் வேலை பார்க்க சென்றார். வேலை முடிந்து இரவில் சொந்த ஊருக்கு டூ வீலரில் வந்தார். திருப்புத்துாரை அடுத்து என்.புதுார் அருகே செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற புதுப்பட்டி பூபாலசிங்கம் மகன் கணேஷ்குமார்28, என்பவர் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து டூவீலரும், இருவரும் ரோட்டோர பள்ளத்தில் விழுந்தனர்.சப்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்த போது செல்வராஜ் காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.படுகாயமடைந்த கணேஷ்குமாரை திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி