உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 100 ஆண்டு கடந்து தாகம் தீர்க்கும் பாதரக்குடி ஊருணி

100 ஆண்டு கடந்து தாகம் தீர்க்கும் பாதரக்குடி ஊருணி

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீர் ஊருணியை ஒரு குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகின்றனர். காரைக்குடி குன்றக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது பாதரக்குடி. இங்கு 300 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். காரைக்குடி -- மதுரை நெடுஞ்சாலையில் ஊரணி உள்ளது.இங்கு பல ஆண்டுக்கு முன் வீடு கட்டுவதற்கான தோண்டிய பள்ளத்தில் நீரூற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நான்கு பக்கமும் படித்துறை கட்டி பராமரித்து வந்தனர். தொடர்ந்து கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.நுாறு ஆண்டுகளை கடந்து இந்த ஊரணி பராமரிக்கப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோயில் விழாக்களுக்கும், சமையலுக்கும் இந்த ஊரணி தண்ணீர் பெரிதும் உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Gopalakrishnan
ஜன 15, 2024 02:10

தினமலர் ஆசிரியர் குழுமத்திற்கு : கட்டுரை தலைப்பில் ஊருணி என்று குறிப்பிட்டுவிட்டு உள்ளே எட்டு இடங்களில் ஊரணி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஊருணி என்பதே சரி. எழுத்துப் பிழைகள் உள்ளன.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை