உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 17 பேர் பலி

 சிவகங்கை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 17 பேர் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த சாலை விபத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 154 சாலை விபத்துக்களில் 358 பேர் பலியாகினர். 791 பேர் காயம் அடைந்தனர். மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. இதில் டூவீலர் விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டத்தில் 17 பேர் இறந்துள்ளனர். நவ.30 திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் பலியாயினர். நவ.10 திருப்புவனம் அருகே சக்குடி பகுதியில் போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் டூவீலரில் சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட குழந்தையின் தாய் தந்தை பலியாகினர். நவ.11 சிவகங்கை தொண்டி சாலையில் சுற்றுச்சாலை சந்திப்பில் டாஸ்மாக் கோடவுன் அருகே நடந்த விபத்தில் தனியார் கல்லுாரி மாணவர் சமயபிரபு இறந்தார். நவ.12 காலையில் மினி பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஏனாபுரத்தில் இருந்து பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவர் சந்தோஷ்குமார் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த விபத்தில் பலியாகினார். நவ.30 தேவகோட்டையில் வேன் டிரைவர் அவரது வேனில் பிரேக் போடாமல் இறங்கியதால் அவரது வேனே மோதி உடல் நசுங்கி பலியானார். சாலை விபத்துக்களைத் தடுக்க சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ