2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிவகங்கையில் ஒருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., திபாகர் தலைமையிலான போலீசார் மதுரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 கிலோ எடையுள்ள 51 மூடைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சரக்குவாகனம் ஓட்டி வந்த டிரைவரை விசாரித்த போது அவர் மானாமதுரை வெள்ளிக்குறிச்சியை சேர்ந்த அய்யங்காளை மகன் ராஜ்குமார் 19 என்பதும், அவர் வெள்ளிக்குறிச்சி மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து மதுரை வரிச்சூரில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.ராஜ்குமாரை கைது செய்த போலீசார் சரக்கு வாகனத்தையும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.