உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அம்மை நோய் தாக்கி 21 கோயில் மாடு பலி

 அம்மை நோய் தாக்கி 21 கோயில் மாடு பலி

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 2 வாரத்தில் 21 மாடுகள் அம்மை நோய் தாக்கி பலியாகியுள்ளது கால்நடை வளர்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில் மாடுகள் ரோடு, வயல்களில் திரிகிறது. வீடுகளிலும் ஏராளமான மாடுகள் விவசாயம், பால் உற்பத்திக்காக வளர்க்கப் படுகின்றன. இப்பகுதியில் சில வருடங்களாகவே அம்மை, காணை நோய்களால் அதிக மாடுகள் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. சுற்றித் திரியும் கோயில் மாடுகளுக்கு ஏற்படும் இந்நோய் வீட்டு மாடுகளுக்கும் பரவி வருகிறது. தற்போது அம்மை நோய் தொற்று பரவலாக காணப்படுகிறது. கடந்த இரு வாரத்தில் மட்டும் 21 மாடுகள் நோய் பாதிப்புக்கு ஆளாகி கோசாலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளன. மாடுகளின் தோல் பகுதியில் கட்டிகள் உருவாகி பசுமாடுகளின் பால் சுரக்கும் அளவும் குறைகிறது. சினையாக இருக்கும் மாடுகளுக்கு கரு கலைந்து விடும் அபாயமும் உள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையினர் அவ்வப்போது தடுப்பூசி முகாம்களை நடத்தினாலும், அனைத்து மாடுகளுக்கும் சிகிச்சை சென்று சேர்வதில்லை. எனவே முழு அளவில் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை