| ADDED : டிச 05, 2025 05:56 AM
மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இயேசு பிறப்பின் 2025ம் ஆண்டு மாபெரும் ஜீபிலியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர் நிகழ்ச்சியாக இடைக்காட்டூர் சர்ச்சில் 24 மணி நேர தொடர் நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட் சாதனம் வழங்கும் விழா நேற்று காலை 11:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது. திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், வேம்பத்துார் மிக்கேல்பட்டினம் பாதிரியார் ஜேம்ஸ் தலைமையில் பாதிரியார்கள் புஷ்பராஜ், மரிய பாக்கியநாதன், ரமேஷ் ராஜா, ஓனாசியஸ், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரபாகரன் நற்கருணை பிரசன்னத்தை துவங்கி வைத்தனர். இன்று மதியம் 1:00 மணி வரை நடைபெறும் ஆராதனை விழாவில் பாதிரியார்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார், பாதிரியார் பிரின்ஸ் மற்றும் பங்கு இறைமக்கள், திருத்தல நண்பர்கள் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.