மக்கள் தொடர்பு முகாமில் ரூ.24.73 லட்சம் நலத்திட்டம்
சிவகங்கை: மறவமங்கலத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். தாசில்தார் முபாரக் உசேன் வரவேற்றார்.சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், திட்ட இயக்குனர் சிவராமன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் மறவமங்கலம் அன்பழகன், உசிலங்குளம் சாந்தா, சிரமம் ராஜகோபால் பங்கேற்றனர். முகாமில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். அரசின் சார்பில் 132 பயனாளிகளுக்கு ரூ.24.73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.