மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
11-Oct-2024
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஊக்கதொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி பேசுகையில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு தனியார் நிறுவனங்களைவிட குறைவான விலையில், தரமானதாக வழங்கப்படுகிறது.அரசு நிர்ணயம் செய்த விலையை விட குறைவாக ஆனால் லாபம் கிடைக்கும் வகையில் விலை வைக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி விற்கப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற வருவாய் அதிகரிப்புக்கு அடிப்படையாகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டு லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.1.00 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார்.
11-Oct-2024