மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் மீது வழக்கு
19-Mar-2025
காரைக்குடி : ஆத்தங்குடி நலம் தரும் சாய்பாபா கோயிலில் ராம நவமியை முன்னிட்டு 333 கிலோ எடையிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.நேற்று காலை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வேத பாராயணத்துடன் பூஜை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு கலச அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சிவக்குமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை தேனம்மை, தேவகோட்டை ரவி தமிழ்வாணன், ஆத்தங்குடி மீனாட்சி சுந்தரம், பழனியப்பன் வாழ்த்தினர். நிர்வாக இயக்குனர் சண்முகம் நன்றி கூறினார். ராமர் பிறந்தநாளை முன்னிட்டு 333 கிலோ கேக் தயார் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
19-Mar-2025