உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 34 குழந்தை தொழிலாளர் மீட்பு கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு  

34 குழந்தை தொழிலாளர் மீட்பு கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு  

சிவகங்கை: மாவட்ட அளவில் இது வரை 34 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.9.10 லட்சம் வழங்கியுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதி மொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரை ஆனந்த், கவுன்சிலர் அயூப்கான் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து வரவேற்றார். உதவி ஆய்வாளர்கள் சுதாகரன், ஆறுமுகம், முத்திரை ஆய்வாளர் மனோகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட் அலுவலர் ராமசந்திரன், மகளிர் வல்லுநர் பவானி, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குனர் ஜீவானந்தம், எஸ்.ஐ., குமரேசன், குழந்தை, ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லலிதா பங்கேற்றனர்.

34 குழந்தை தொழிலாளர் மீட்பு

கலெக்டர் பேசியதாவது, இம்மாவட்டத்தில் 2018 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை செங்கல் சூளை, கரும்பு வெட்டுதல், ஆடு மேய்த்தல், சலவை, வீட்டு வேலை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்ட 34 குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரண தொகை ரூ.9.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை