உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ஓய்வு ஆசிரியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை: வெள்ளிப்பொருட்களும் பறிபோயின

மானாமதுரை ஓய்வு ஆசிரியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை: வெள்ளிப்பொருட்களும் பறிபோயின

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாநகரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் வீட்டில் 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தயாநகரில் மாரியப்பன், மகன் சண்முகப்பிரியன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக அக்., 16 ல் வீட்டை பூட்டிவிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்துாருக்கு குடும்பத்துடன் மாரியப்பன் சென்றார். பண்டிகையை கொண்டாடி விட்டு நேற்று மானாமதுரைக்கு வந்த போது வீட்டின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின்படி சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகே உள்ள சி.சி.டிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை