உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிராவயல் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு

சிராவயல் மஞ்சுவிரட்டு 500 காளைகள் பங்கேற்பு

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நாளை காலை 10:30 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்குகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் வரை பங்கேற்கும் என தெரிவித்தனர்.சிராவயல் புதுாரில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொட்டலில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த ஆண்டு கூடுதலாக பார்வையாளர் மாடம், ரோடு வசதி செய்துள்ளனர். காளைகள் பதிவு கடந்த 3 நாட்களாக இணையதளத்தில் பதிவு நடந்தது. இதில் 500 காளைகள் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கின்றனர். வெற்றிபெறும் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுபொருட்கள் வழங்கப்படும். மஞ்சுவிரட்டு விழா ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமையில் பெரியநாயகி, தேனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடித்து ஊர்வலமாக தொழுவிற்கு வருவார்கள். அங்கிருந்து காளைகள் அவிழ்த்து விடப்படும். காலை 10:30 மணிக்கு துவங்கும் மஞ்சுவிரட்டு, பதிவு செய்த காளைகள் அனைத்தும் அவிழ்த்து விடப்படும் வரை நடைபெறும். சிறாவயல் மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார் வரை ஈடுபட உள்ளனர். வழிநெடுகிலும் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து போலீஸ் விசாரணைக்கு பின்னரே காளைகள் அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை