மேலும் செய்திகள்
ரேஷன் கடையில் பணி; விண்ணப்பதாரர்கள் தவிப்பு
06-May-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணிக்கு 4,149 பேர்களிடம் நேர்காணல் நடத்தி 54 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.மாவட்ட அளவில் கூட்டுறவு, மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப 2024 நவ.,ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பிளஸ் 2 தேர்ச்சியை தகுதியாக கொண்டு வரவேற்கப்பட்ட விண்ணப்பத்தில், 4,247 பேர் விண்ணப்பித்தனர். இதில், 98 பேர் மனுக்கள் தகுதியின்மை காரணமாக நீக்கப்பட்டது. இறுதியாக 4,149 பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவர்களுக்கு நவ.,ல் கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.நேர்காணல் முடிவின்படி ரேஷன் கடைகளில் விற்பனையாளர் 30 பெண்கள் உட்பட 54 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகளில் பணியில் சேர்வதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணியில் சேர உள்ளனர்.
06-May-2025