6.25 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது
சிவகங்கை : சிவகங்கை அருகே சோழபுரத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் காளிமுத்தன், எஸ்.ஐ., ஜெகதீசன், ஏட்டு தேவராஜ் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணங்குடி அருகேபருத்திக்குடியைச் சேர்ந்த ராமையா மகன் தினேஷ் ஆனந்த் 22, வந்த காரை சோதனை செய்தனர். அதில் பதுக்கப்பட்ட 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காரைக்குடி அருகே பாதரக்குடியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் மதுமிதன் 22, துரைப்பாண்டியன் மகன் ஹரிஹரன் 22, ஆகியோர் வீட்டில் இருந்து 4.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மூவரிடம் இருந்தும் மொத்தம் 6.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.