2024ல் அதிகபட்சமாக 56 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், 2024ம் ஆண்டில் அதிகபட்சமாக 56 பேர் குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.மாவட்டத்தில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொந்தரவை தடுக்கும் நோக்கில் மாவட்ட எஸ்.பி., பரிந்துரையின் பேரில், கலெக்டர்கள் ஒவ்வொரு முறையும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடுவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சிவகங்கை தனி மாவட்டமாக 1985ல் பிரிந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 39 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 பேர் மீது மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. 2007ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 4 முதல் அதிகபட்சம் 52 பேர் மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்சிறையில் அடைக்க கலெக்டர்கள் பரிந்துரை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2024ம் ஆண்டில்மட்டுமே 56 பேர் குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.