உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒரு வாகனத்திற்கு மேல் செல்ல வழி இல்லாத தேசிய நெடுஞ்சாலை

ஒரு வாகனத்திற்கு மேல் செல்ல வழி இல்லாத தேசிய நெடுஞ்சாலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே சென்று வரும் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலையின் அகலம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர். காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து இருபுறமும் சில மீட்டர் துாரத்திற்கு ரோடு மிகவும் குறுகியதாக உள்ளது. கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு ஒரு பக்கம், டூவீலர்களை இருபுறமும் ரோட்டை மறித்து நிறுத்துவதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஏதாவது வாகனங்கள் பழுதாகி நின்று விட்டால் அச்சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட வேண்டியுள்ளது. அப்படி திருப்பி விடப்படும் போது அரசு மருத்துவமனை வழியாக வாகனங்கள் செல்லும் போது ஆம்புலன்ஸ், நோயாளிகளின் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. எனவே நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறாக டூவீலர்களை நிறுத்தாதவாறு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை