உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்கம்பங்களை மாற்றாமல் ரோடு விரிவாக்கத்தால் விபத்து

மின்கம்பங்களை மாற்றாமல் ரோடு விரிவாக்கத்தால் விபத்து

இளையான்குடி: இளையான்குடி செந்தமிழ் நகரில் தஞ்சாவூர், சாயல்குடி ரோடு விரிவாக்க பணியின் போது மின் கம்பங்கள் மாற்றப்படாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.தஞ்சாவூரில் இருந்து சாயல்குடி செல்லும் ரோட்டில் இளையான்குடி செந்தமிழ் நகர் பகுதியில் ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது. ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்காமல் உள்ளதால் வாகனங்கள் மின் கம்பங்களில் மோதி விபத்துக்குஉள்ளாகிறது.நேற்று காலை இவ்வழியாக சென்ற ஒரு கார் மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மின் கம்பங்களை மாற்ற புதிய மின்கம்பங்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டுஉள்ளதாகவும் அதற்குரியகட்டணத்தை நெடுஞ்சாலைத்துறை செலுத்தவில்லை என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்களை மாற்றுவதற்குரிய கட்டணங்கள் குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறி வருகின்றனர். மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை