உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கோடையை சமாளிக்க கூடுதல் துணை மின் நிலையங்கள்

மானாமதுரையில் கோடையை சமாளிக்க கூடுதல் துணை மின் நிலையங்கள்

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு மானாமதுரை சிப்காட் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் மானாமதுரை எல்லை விரிவடைந்து அனைத்து பகுதிகளிலும் புதிதாக வீடு, வணிக நிறுவனங்களை கட்டி வருகின்றனர்.மானாமதுரை சுற்றுவட்டார பகுதியில் கூடுதல் மின்தேவை ஏற்பட்டுள்ளது.மேலும் நகராட்சி பகுதியில் முக்கியமான தெருக்கள்தவிர மற்ற ஏராளமான பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைந்தழுத்த மின்சார பிரச்னையில் தவித்து வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையம் ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் துணை மின் நிலையத்தில் உள்ள மின் கருவிகள் அடிக்கடி பழுதாவதால் சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.ஆகவே இதனை சரி செய்யும் விதத்திலும், கூடுதலாக ஏற்படும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் விரைவில் மானாமதுரை பகுதியில் கூடுதல் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ