உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவி தேர் வெள்ளோட்டம் பிப்.11 க்கு தள்ளிவைப்பு

கண்டதேவி தேர் வெள்ளோட்டம் பிப்.11 க்கு தள்ளிவைப்பு

தேவகோட்டை:கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளாக தேரோட்டம் பிரச்னை இருந்து வருகிறது. தற்போது புதிய தேர் செய்யப்பட்டும் வெள்ளோட்டம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்கள் சார்பில் கோர்ட்டை நாடினர். ஐகோர்ட் தேர் வெள்ளோட்டம் நடத்த தேதியை முடிவு செய்து தேரோட்டத்தை நடத்த உத்தரவிட்டது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இரு பிரிவினர் இடையே பேசி ஜன. 21 என வெள்ளோட்ட தேதியை முடிவு செய்து கோர்ட்டில் தெரிவித்தனர். அன்று வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாகவும், சிவகங்கை சமஸ்தான ஊழியர்கள் தேரை இழுப்பர் என அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில் நேற்று திடீரென நான்கு நாட்டை சேர்ந்த இருதரப்பினர் ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் டி.எஸ்.பி., பார்த்திபன் முன்னிலையில் நடந்தது. பிரதமர் ராமேஸ்வரம் வருவதால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் செல்ல வேண்டி இருப்பதாலும் மேலும் பல காரணங்களால் பாதுகாப்பு பணிக்கு போலீஸ் பற்றாக்குறை இருப்பதால் ஜன.21 (நாளை) திட்டமிட்ட கண்டதேவி தேர் வெள்ளோட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிப். 11 காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கண்டதேவி தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை