உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை

மாற்று வழியில் சுப்பன் கால்வாய் செயல்படுத்த ஆலோசனை

மானாமதுரை: மானாமதுரையில் இருந்து இளையான்குடிக்கு செல்லும் சுப்பன் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மானாமதுரை அருகே செல்லும் உப்பாற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து மழைக்காலங்களில் சேரும் மழைநீர் வைகை ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது. இதனை மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு இளையான்குடி வரை கால்வாய் வெட்டப்பட்டது. இத்திட்டம் முழுமை பெறாமல் முடங்கி உள்ள நிலையில் கால்வாய்கள் ஆற்றை விட மேடாக இருப்பதாலும், கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளதாலும், கழிவு நீர் செல்வதாலும் இக்கால்வாயை துார்வாரி புதுப்பிக்க வேண்டுமென்று மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து பொதுப்பணித்துறை நீர்வளம் சார்பில் சுப்பன் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்ட நிலையில் மானாமதுரையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் ரமேஷ்,உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் அழகுராஜா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி