உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 

கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் 

காரைக்குடி; காரைக்குடியில் சக்தி சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சக்தி சர்க்கரை ஆலை தலைவர் எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். முதுநிலை பொது மேலாளர் உத்தண்டி முன்னிலை வகித்தார். கரும்பு ஆலை அதிகாரிகள், காரைக்குடி, சாக்கோட்டை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

காவிரி - குண்டாறு திட்டம் நன்று

முதுநிலை பொது மேலாளர் உத்தண்டி பேசியதாவது: தமிழகத்தில் காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேறினால், கரும்பு விவசாயிகளின் நீர்வள பிரச்னையை தீர்த்து வைக்கும் முக்கிய நீர்வள திட்டமாக அமையும். இதன் மூலம் கரும்பு விவசாயம் அதிகரித்து, கரும்பு உற்பத்தி அதிகரித்து ஆலைக்கு அதிக கரும்புகள் வருவதின் மூலம் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி பெருகி, ஏற்றுமதி அதிகரிக்கும் என்றார். சிறந்த கரும்பு விவசாயிகளுக்கு, சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை