உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாய கடன் வரம்பு உயர்வு

விவசாய கடன் வரம்பு உயர்வு

சிவகங்கை:தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அடமானமின்றி வழங்கப்படும் குறுகிய கால கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.தேசிய, மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானமின்றி விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக அதிகபட்சம் ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்த கோரிக்கை எழுந்தது. ரூ.2 லட்சம் வரை விவசாயம் சார்ந்த கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் ஆர்.கிரிதரன் உத்தரவிட்டுள்ளார். 2025 ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை