| ADDED : டிச 03, 2025 06:18 AM
சிவகங்கை: சிவகங்கை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் நேற்று சிவகங்கை சட்டசபை தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ஜெபி கிரேசியாவிடம் புகார் அளித்துள்ளார். ஜெ., மாவட்ட செயலாளர் இளங்கோ, நகர் செயலாளர் என்.எம்.,ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர் கோபி பங்கேற்றனர். எம்.எல்.ஏ.,செந்தில்நாதன் கூறியதாவது: கடந்த 4 நாட்களாக ஆளுங்கட்சியினர் உதவியுடன் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போலி வாக்காளர்களை தற்போது இருப்பது போல், மீண்டும் விண்ணப்பத்தில் போலியாக கையெழுத்திட்டு சேர்த்து வருகின்றனர். மாவட்ட அளவில் இது போன்று பல ஆயிரம் வாக்காளர்களை சேர்த்துள்ளனர். போலியாக சேர்க்கப்பட்ட விண்ணப்பத்தின் வாக்காளர் பெயர்,முகவரி,அலைபேசி எண் போன்றவற்றை விசாரித்து நீக்க வேண்டும். இல்லாவிடில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி மூலம் இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் செய்வோம் என்றார். போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபிகிரேசியா கூறியதாவது: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அளித்த புகாரின்படி சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பங்கள் பரிசோதனை செய்யப்படும். அதில் தவறு நடந்திருந்தால் டிச., 9 க்குள் நீக்குவதற்கு கால அவகாசம் இருப்பதால், நீக்கி விடுவோம் என்றார்.