உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயலில் அ.தி.மு.க., துவக்க நாள் பொதுக்கூட்டம்

புதுவயலில் அ.தி.மு.க., துவக்க நாள் பொதுக்கூட்டம்

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுவயலில் அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பேச்சாளர் கோபிகா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம், உமாதேவன், நாகராஜன், குணசேகரன், சாக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பின் ஜெ., ஆட்சியில் அமர்ந்து சாதித்தார். ஒரு முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததாக சரித்திரம் இல்லை. மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை, வேங்காவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களை பார்க்க முதல்வர் ஸ்டாலின் வந்தததில்லை. ஆனால், கரூருக்கு மட்டும் எப்படி வந்தார். அக்கறையோடு கரூர் சென்று அரசியல் செய்தார். உலகின் தலைசிறந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரோடு நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். இந்திய இறையாண்மைக்காக தன்னை அர்ப்பணிக்கும் கட்சி பா.ஜ., இதனால் தான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். பத்திரபதிவு துறையில் உதவி பதிவாளர் பதவி ஆண்டு முடிந்து, மீண்டும் ரீசார்ஜ் செய்தால் தான் பதவி நீடிக்குமாம். அலைபேசிக்கு தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கேள்வி பட்டுள்ளோம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் அரசு பதவியில் தொடர்ந்து உட்கார ரீசார்ஜ் சிஸ்டம் வைத்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை