உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம்   வாகனங்களில் செல்வோர் அவதி 

அல்லுார் -- பனங்காடி ரோடு சேதம்   வாகனங்களில் செல்வோர் அவதி 

சிவகங்கை,: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அல்லுார் - - பனங்காடி ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நாட்டரசன்கோட்டை விலக்கு அருகே அல்லுார் - பனங்காடி ரோடு செல்கிறது. இந்த ரோடு வழியாக விஜயமாணிக்கம், அல்லுார், சாத்தனி, ரோஸ் நகர் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு வாகனங்களில் செல்லலாம். சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வழியாக சுற்றியும் இக்கிராமங்களுக்கு சென்று வரலாம். ஆனால், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டரசன்கோட்டை விலக்கு வழியாக செல்லும் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. நாட்டரசன்கோட்டை விலக்கில் இருந்து செல்லும் அல்லுார் - பனங்காடி ரோடு 2.5 கி.மீ., துாரம் வரை வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாகவும், ரோடுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ரோட்டை புதுப்பித்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை