உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் 22 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கீழடியில் 22 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கீழடி: கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003ம் ஆண்டு படித்த மாணவ, மாணவியர்கள் 22 வருடத்திற்கு பின் நேற்று மீண்டும் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கீழடியில் 1960ம் ஆண்டு அரசு பள்ளி தொடங்கப்பட்டது. அதன்பின் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கீழடி, கொந்தகை, பசியாபுரம், சொட்டதட்டி, சிலைமான், முனியாண்டிபுரம், அகரம் கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இங்கு 1996 முதல் 2003ம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவிகள் நேற்று பள்ளியில் 22 ஆண்டுக்கு பின் கூடினர். பள்ளி வகுப்பறை, ஆசிரியர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் கூறியதாவது, இப்பள்ளியில் படித்து 22 ஆண்டுக்கு பின் சந்திப்பதை பெருமை கொள்கிறோம். தமிழர்களின் தாய்மடி கீழடி என்ற பெருமையை பெற்றுள்ள இக்கிராமத்திற்கு வந்தது மகிழ்ச்சி தருகிறது. முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கியுள்ளோம். படிப்படியாக பள்ளிக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தர உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை