மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
12-Oct-2024
சிவகங்கை: திருப்புத்துார் அருகே நாச்சியாபுரம் பசு மடத்தில் ஆழ்வார், நாயன்மார்கள் சிலை பிரதிஷ்டை அக்., 20 ல் நடக்க உள்ளது.இதற்காக காரைக்குடி அருகே பர்மாகாலனி சிவானந்தா மகாலில் நேற்று ஆழ்வார், நாயன்மார்கள் உருவ சிலைகள் வைக்கப்பட்டன. சிலைகளுக்கு வேள்வி, பூஜைகள், பாசுரம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இசை, பூஜைகள் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஆசியுரை வழங்கினார். தேவார, திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு வேள்வி, வேதமந்திரங்கள், பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிலைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு சீர்காழி சிவசிதம்பரத்தின் இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு பூஜைகள் துவங்குகிறது. காலை 7:30 மணிக்கு ஆழ்வார், நாயன்மார்கள் சிலை புறப்பாடு காரைக்குடியில் இருந்து நாச்சியாபுரம் பசுமடம் வரை செல்கிறது. அக்., 20 அன்று காலை இசை, பூஜை, வேள்விகள் நடக்கிறது. அன்று காலை 9:00 மணிக்கு மேல் ஆழ்வார், நாயன்மார்கள் பிரதிஷ்டை செய்யப்படும். இதில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, பொன்னம்பல அடிகள், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் ஆசி வழங்குகின்றனர். அன்று மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
12-Oct-2024