உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போதை டிரைவரால் கடையில் புகுந்த ஆம்புலன்ஸ்

போதை டிரைவரால் கடையில் புகுந்த ஆம்புலன்ஸ்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்னழகன் மகன் சிவக்குமார் 40. இவர் சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார்.நேற்று சிங்கம்புணரியிலுள்ள வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துள்ளார். மதியம் சென்னைக்கு ஆம்புலன்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சிவகுமார் மது போதையில் இருந்துள்ளார். அரணத்தங்குன்று அருகே சென்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை. சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி