மேலும் செய்திகள்
புரட்டாசி மாதம் எதிரொலி இறைச்சி கடைகள் 'வெறிச்'
22-Sep-2025
காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சியில் ஆடுவதைக்கூடம் பராமரிப்பின்றி கழிவுநீர் நிரம்பி கிடப்பதோடு செப்டிக் டேங்கும் திறந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. காரைக்குடி மாநகராட்சியில் 500 க்கும் மேற்பட்ட இறைச்சி, மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் நாளுக்கு நாள் மீன், இறைச்சிக்கடைகள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்யப்படுவதை தவிர்க்க கழனிவாசல் அருகே ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் ஆடுகளை பரிசோதனை செய்த பிறகு ஆடுகள் அறுக்கப்பட வேண்டும். மேலும் வெட்டப்பட்ட இறைச்சியின் மீது சுகாதாரமான இறைச்சி என்பதற்கு அடையாளமாக மாநகராட்சி முத்திரை குத்தப்படும். பிறகு அந்தந்த இறைச்சியை கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும். ஆனால் பல இறைச்சிக் கடைகளில் ஆடுவதைக்கூடத்திற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே ஆடுகளை அறுத்து விற்பனை செய்கின்றனர். ஆடுவதை கூடத்திற்கு சென்றாலும் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அளவிற்கு, ஆடுவதைக்கூட சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கட்டடத்தின் பின்பகுதியில் கழிவு மற்றும் சாக்கடை கழிவு பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. தவிர செப்டிக் டேங்க் தொட்டி மூடி திறந்து கிடப்பதால் நோய் தொற்று அபாயமும் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
22-Sep-2025