மேலும் செய்திகள்
அங்கன்வாடி உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
04-Oct-2024
சிவகங்கை : அங்கன்வாடி ஊழியர் சங்க போராட்டத்தால், சிவகங்கையில் 118 அங்கன்வாடி ஊழியர், 39 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் குறு வள மையம், பிரதான அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், பணிபுரியும் குறுவள மைய ஊழியர்கள் 5 ஆண்டு பணிக்கு பின், பிரதான மைய ஊழியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அதே போன்று பிரதான மைய உதவியாளருக்கு, அங்கன்வாடி மைய பணியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.2023 டிச., தகுதி நாளாக கொண்டு குறுவள மைய ஊழியர் 118, பிரதான அங்கன்வாடி மைய உதவியாளர் 39 பேர்களுக்கு 2024 ஜன., ல் பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எம்.பி., தேர்தல் நடத்தை விதி உள்ளிட்ட காரணங்களை கூறி, இப்பதவி உயர்வினை கடந்த 9 மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர், சிவகங்கையில் உள்ள மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவாக குறுவள மைய ஊழியர்கள் 118 பேருக்கு, பிரதான மைய ஊழியராகவும், பிரதான மைய உதவியாளர் 39 பேர்களுக்கு, பிரதான மைய பணியாளராக பதவி உயர்வு வழங்கி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
04-Oct-2024