உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

இளையான்குடி: பெரும்பச்சேரி மேலத் தெரு வேல்முருகன் கோயிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் தலைமையில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களுக்கு பூஜை செய்த பின்னர் அபிஷேகம் நடைபெற்று வேல்முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் முன் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி