உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஐயப்பன் கோயிலில் வருடாபிேஷக விழா

ஐயப்பன் கோயிலில் வருடாபிேஷக விழா

மானாமதுரை: மானாமதுரை தெற்கு ரத வீதியில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அதிகாலை பால், சந்தனம், இளநீர், தயிர், நெய், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு கருவறை மற்றும் கோயில் வளாக பகுதி முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சன்னதி முன்பாக 108 சங்காபிஷேகமும்,ஹோமங்களும் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை