உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுற்றுலா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை:சுற்றுலாத்துறை சார்பில் தொழில் முனைவோர் உட்பட 17 விதமான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சுற்றுலா தொழில் முனைவோர் வெற்றியாளர், பயண ஏற்பாட்டாளர், புதிய யுக்திகளை கையாளுவோர், வழிகாட்டி, செட்டிநாடு உணவகம், ஓட்டல் நடத்துவோர் என 17 விதமான சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ளோர் www.tntourismawards.com'' என்ற இணையதளம் மூலம் செப்., 15க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு காரைக்குடி சுற்றுலா அலுவலரை 89398 96400ல் தொட்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை