உள்ளூர் செய்திகள்

கலை கல்வி போட்டி

சிவகங்கை : சிவகங்கை சாய்பாலமந்திர் மற்றும் பாலமுருகன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கலை கல்வி சம்பந்தப்பட்ட போட்டி நடந்தது. பள்ளி நிர்வாகி குமார் தலைமை வகித்தார். பாலமுருகன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்த்தி வரவேற்றார்.நடுவர்களாக நல்லாசிரியர் கண்ணப்பன், வழக்கறிஞர் கிருஷ்ணகுமரேசன், ரம்யா, சரவணப்பிரியா, யோகிராம் பள்ளி தலைமையாசிரியர் ஜனனி கலந்துகொண்டனர். சத்தீஷ் ஷ்யாம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தலைமையாசிரியர் கோமதிபாலா நன்றி கூறினார்.* தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் தாமரை கலந்துகொண்டார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை