உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

 ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

திருப்புத்துார், ஜன.1-- திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஜன. 3ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா டிச. 25ல் மாணிக்கவாசகருக்கு காப்புக்கட்டித் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெறுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடும்,இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறும். ஜன.3 அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெறும். காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 10:35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை