உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எல்.ஐ.சி.,யில் தனி நபர் காப்பீடு வயது வரம்பை அதிகரிக்கவும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

எல்.ஐ.சி.,யில் தனி நபர் காப்பீடு வயது வரம்பை அதிகரிக்கவும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

திருப்புத்தூர்: எல்.ஐ.சி.,யில் தனி நபர் காப்பீட்டிற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என சிவகங்கை, ராமநாதபுரம் எம்.பி.,க்கள் மூலம் எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எல்.ஐ.சி.,யில் பிரீமியத்திற்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். அக்., முதல் குறைந்த காப்பீடு தொகை ரூ.1 முதல் 2 லட்சமாக உயர்த்தியதால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.முகவர்களுக்கான போனஸ் தொகையை ரூ.1000 க்கு ரூ.45 என அதிகரிக்க வேண்டும். பாலிசிதாரர்கள் வயதை 50 ஆக குறைத்துள்ளதை, 59 ஆக அதிகரிக்க செய்ய வேண்டும் என மதுரை கோட்ட எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர் சிவகங்கை, ராமநாதபுரம் எம்.பி.,க்கள் மூலம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ