மேலும் செய்திகள்
சாலையோர மரங்கள் ஏலம்
08-Feb-2025
-காரைக்குடி,: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழா பிப்.2 முதல் பிப்.11(இன்று) வரை நடைபெறுகிறது. தினமும் ஒரு மண்டகபடி சார்பில் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி ஒரு சமுதாயத்தினரின் மண்டப படி நிகழ்ச்சியை தொடர்ந்து, சுவாமி பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.குத்துவிளக்கு, வாளி, அர்ச்சனை பொருட்கள், பூ கூடைகள் உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதில் உப்பு நிரம்பிய எவர்சில்வர் வாளியை பக்தர் ஒருவர் ரூ.25 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். பல்வேறு பொருட்களையும் சேர்த்து மொத்தமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
08-Feb-2025