உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

காரைக்குடி : காரைக்குடி ரன்னர்ஸ் கிளப் சார்பில், உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி துவக்கி வைத்தார். உதவி எஸ்.பி., ஆஷிஷ் புனியா, இந்திய மருத்துவ சங்க காரைக்குடி தலைவர் ஜோதி கணேஷ், டாக்டர். ஆஷா லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர்கள், ஆண்கள் பெண்கள் என்ற பிரிவில் போட்டி நடந்தது. அழகப்பா பல்கலை பவநகர் ஸ்டேடியத்தில் இருந்து கல்லூரி ரோடு, ராஜிவ் சிலை வழியாக மீண்டும் ஸ்டேடியம் வந்து சேர்ந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி