உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன

கீழநெட்டூரில் பலத்த காற்றுடன் மழை வாழை மரங்கள் சாய்ந்தன

இளையான்குடி: இளையான்குடி அருகே கீழநெட்டூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில், மரங்கள் சாய்ந்து,போக்குவரத்து பாதித்தன. இளையான்குடி அருகே கீழநெட்டூர், வேலடிமடை,முனைவென்றி மற்றும் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கீழநெட்டூரில் இருந்து இளையான்குடி செல்லும் மெயின் ரோட்டில் ஓரமாக இருந்த பெரிய மரமும் சாய்ந்தன. இளையான்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மரத்தை அகற்றினர்.மேலநெட்டூர் துணை சுகாதார நிலையத்திற்குள் இருந்த மரமும் சாய்ந்தது. ஆலம்பச்சேரியில் வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை