உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பீகார் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

பீகார் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

காரைக்குடி:காரைக்குடி அருகே புதுவயலில் உள்ள மாடர்ன் ரைஸ் மில்லில் மின்சாரம் தாக்கி, பீகார் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தரோகி ரிஷி மகன் சங்கர் ரிஷி 34. இவர் புதுவயலில் உள்ள மாடர்ன் ரைஸ்மில் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சங்கர் ரிஷி ரைஸ் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சங்கர் ரிஷியை புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் ரிஷி உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ