உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் கணக்கெடுப்பு

திருப்புத்துார்: சிவகங்கை வனக்கோட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வகித்தார். மாவட்டத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உட்பட 25 பறவைகள் வசிக்கும் இடங்களில் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி, சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். பறவைகள் கணக்கெடுப்பிற்கு 25 குழுக்களாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணியை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்