ரத்ததான முகாம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிவகங்கை லயன்ஸ் கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் முாமை துவக்கி வைத்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், துணை நிலைய மருத்துவர் முகமது ரபி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க தலைவர் விஸ்வநாதன், செயலாளர் தனபாலன், பொருளாளர் சந்திரசேகரன், திட்ட ஆலோசகர்கள் ராதா, பாபு, திட்ட இயக்குனர்கள் ரமேஷ்கண்ணன், சிங்காரவேலன், அன்புமதி, சரவணப்பெருமாள், கார்த்திக் கலந்து கொண்டனர்.