உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் எடை, பில்லிங் மிஷின் இணைப்பு; கார்டுதாரர்கள் பல மணி நேரம் காத்திருப்பு 

ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் எடை, பில்லிங் மிஷின் இணைப்பு; கார்டுதாரர்கள் பல மணி நேரம் காத்திருப்பு 

சிவகங்கை; சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை, பில்லிங் மிஷின் இணைப்பால், பொருட்களை வாங்க பல மணி நேரம் கடை முன் காத்திருக்க வேண்டியதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மாவட்ட அளவில் கூட்டுறவு துறையின் கீழ் 662 முழு நேர, 167 பகுதி நேர கடைகள் என 829 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளின் மூலம் 4.20 லட்சம் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 500 முதல் அதிகபட்சம் 1300 கார்டுகள் வரை உள்ளன. தினமும் பொருட்களை வினியோகம் செய்தால் மட்டுமே, மாத கடைசியில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் சேரும். ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவை கணக்கிடும் பொருட்டு புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு, பில்லிங் மிஷினுக்கு இணைப்பு வழங்கி பொருட்கள் வழங்கி வருகின்றனர். பெரும்பாலான கிராமப்புற, நகரை ஒட்டிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் முறையாக கிடைப்பதில்லை. இதனால், ஒரு கார்டுதாரருக்கு பொருட்களை பில்லிங் மிஷினில் பதிவு செய்து, ஒவ்வொரு பொருட்களின் எடையையும் சரிபார்த்து, பில்லிங் மிஷினில் அனுமதி பெற்ற பின்னர் தான், அடுத்த பொருட்களை போட வேண்டும். ஒரு கார்டுக்கு 10 முதல் 15 நிமிடம் வரை ஆகிறது. இதனால் ரேஷன் பொருட்களை தினமும் 80 பேருக்கு கூட வழங்க முடியாமல் விற்பனையாளர்கள் தவிக்கின்றனர். பல மணிநேரம் காத்திருக்க முடியாமல், ரேஷன் கார்டுதாரர்கள், விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை