உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மூதாட்டி வீட்டில் குண்டுவீச்சு

 மூதாட்டி வீட்டில் குண்டுவீச்சு

பூவந்தி: திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தல் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர். கே.பெத்தானேந்தல் கிராமத்தில் 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது மகன்கள் அனைவரும் திருப்புவனத்தில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு டூவீலர்களில் வந்த சிலர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீ வைத்து வீசியுள்ளனர். இதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து நேற்று மதியம் பூவந்தி போலீசில் மூதாட்டியின் மகன் புகார் அளித்துள்ளார். முன்விரோதம் காரணமாக வீசப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் வீசப்பட்டதா என பூவந்தி போலீசார் சி.சி.டி.வி.,காட்சியினை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ